Monday, June 14, 2010

Abhiyum Naanum

அழகிய அழகிய கிளி
ஆண்: அழகிய அழகிய கிளி ஒன்றை பிடிபிடி பிடித்தது பூனை
பனிவிடும் பனிவிழும் மலர் ஒன்றை பறிபறி பறித்தது யானை
அய்யோ அய்யோ அநியாயம் அய்யய்யோ
உயிர் போல் வளர்த்தேன் உன் உறவு பொய்யய்யோ
தூளானது இதயம் இதயம்
அடிதானடி வலிகள் அறியும்
அது போன்றதே எனது நிலையும் ஆசை கண்ணே (அழகிய அழகிய...)

ஆண்: உயிரின் பிரிவு முழுசாய் மரணம்
உறவின் பிரிவு பாதி மரணம்
விதியின் விதியில் நானே சரணம்
ஞானம் பழக இதுவே தருணம்
என் வாசனை வாசனை மாலையோ
இன்று வானர சேனையிடம்
அட கானிகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி சேருமிடம்
என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ
தூளானது இதயம் இதயம்
அடிதானடி வலிகள் அறியும்
அது போன்றதே எனது நிலையும் ஆசை கண்ணே

ஆண்: தாய் தான் அழுதால் ஊனம் நனையும்
தந்தை அழுதால் வீடே நனையும்
ஊமை மொழியில் உள்ளம் எரியும்
பெண்ணைப் பெற்றால் உமக்கும் புரியும்
நான் ஆசையில் சேமித்த புதையலை
ஓர் அந்நியன் திருடுவதோ ஆ...
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ
இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என்னாகுமோ
பகல் என்பது முதலில் இனிமை
பகல் என்பது பிரிவில் கொடுமை
முடிவு என்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே


ஒரே ஒரு ஊரிலே
ஆண்: ஒரே ஒரு ஊரிலே.. ஒரே ஒரு அய்யா...
ஒரே ஒரு அய்யாவுக்கு.. ஒரே ஒரு அம்மா...
ஒரே ஒரு அம்மா பெத்தா.. ஒரே ஒரு பொண்ணு...
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல.. கடவுளோட கண்ணு...

ஆண்: ஐயா இருக்காரே! ஐயா!
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காய்ச்சலடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசுரு
மத்ததெல்லாம்... மத்ததெல்லாம்...
இவருக்கு கொசுரு... (ஒரே ஒரு ஊரிலே...)

ஆண்: அக்கா இருக்காங்களே! எங்க அக்கா!
பூச்சியைப் பார்த்தாலே சிலரு
புத்தி மாறிப் போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா
பூத்தொடுத்து நிப்பாங்க
கொண்டதுவும் ஒரு குழந்தை... கொடுத்தவனும் ஒரு குழந்தை...
தொலையட்டும் கழுதையின்னு... தொல்லையெல்லாம் பொறுப்பாங்க...
எங்க அக்கா எங்களுக்கு பரிசு...
எங்க அக்கா மனசோட...
இமயமலை சிறுசு...

ஆண்: அம்மா இருக்காங்களே! அந்த அம்மா!
பொறந்து வரும் போதே சிலரு
வரம் வாங்கி வருவாங்க...
பொறந்து வரும் போதே சிலரு
வரம் தரவே வருவாங்க...
வரமாக வந்தம்மா... வாஞ்சையுள்ள தங்கம்மா...
சித்தெரும்ப நசுக்காத... சிங்கந்தான் எங்கம்மா...
மறு பிறவி உண்டுன்னா... எனக்கென்ன வேணும்...
இந்த மகளுக்கோ தாய்க்கோ நான்...
மகனாக வேணும்... (ஒரே ஒரு ஊரிலே...)

வாவா என் தேவதையே..
ஆண்: வாவா என் தேவதையே.. பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே.. பெண் பூவே வா....
வாவா என் தேவதையே.. பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே.. பெண் பூவே வா....
வான் மிதக்கும் கண்களுக்கு.. மயிலிறகால் மை இடவா...
மார்புதைக்கும் கால்களுக்கு.. மணி கொலுசு நான் இடவா... (வா வா என்...)

ஆண்: செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப் போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
எந்த இலக்கணக் கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலைப்போல ஒரு
முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே (வா வா என்...)

ஆண்: பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக்கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
வெளிநாட்டு ஆடைக்கட்டி நடந்த போது
இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன் (வா வா என்...)

மூங்கில் விட்டு சென்ற
ஆண்: மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
காற்றைப் போல் வெயில் ஒன்று கடந்து போன பின்னும்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
மாயை போல் களைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லிச் செல்லும் சேதி என்ன
பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன

சின்னம்மா கல்யாணம்..
ஆண்: சின்னம்மா கல்யாணம்..
சிதனமாய் என்ன தர.....
சின்னம்மா கல்யாணம்..
சிதனமாய் என்ன தர.....
பொன் இல்ல பொருள் இல்ல.....
பொட்டியில பணம் இல்ல.....
உசுர விட என்கிட்ட.....
ஒசந்த பொருள் ஏதுமில்ல.....
மலிவான பொருளுன்னு.....
மறுக்காத நீ தாயி.....
என் உசுர நான் தாரேன்.....
ஏத்துக்கோ என் தாயி.....